கடலுாரில் வெள்ளை நிற காகம் மீட்கப்பட்டது.கடலுார் சிப்காட் வளாகத்தில் தனியார் நிறுவனத்தில் வெள்ளை நிற காகம் ஒன்றை சில காகங்கள் கொத்தி விரட்டின.
தப்ப முயன்று பறந்த வெள்ளை நிற காகம் அந்நிறுவனத்தில் பயன்படுத்தாமல் இருந்த தொட்டிக்குள் விழுந்தது. தகவலறிந்த கடலுார் வன விலங்கு ஆர்வலர், சென்று காகத்தை மீட்டுள்ளதோடு, பாதுகாத்தும் வருகின்றனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் காகம் நன்கு பறந்துவிடும் என்ற நிலையில் பின்பு பறக்க விட திட்டமிட்டுள்ளனர்.
ஒரே கூட்டில் இடப்பட்ட முட்டையில் இந்த வெள்ளை நிற காகம் பிறந்ததால் அதனை மற்ற காகங்கள் ஏற்க மறுத்து துரத்தியதோடு, கடுமையாகவும் தாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காகத்தினை மீட்டு வன விலங்கு ஆர்வலர்கள் அதற்கு முதலுதவி அளித்து பராமரித்து வருவதுடன், மக்களும் குறித்த காகத்தினை ஆர்வமாக அவதானித்தும் வருகின்றனர்.