நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிப்பது போல் உள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலையை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்கியது.
நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள்.
நேற்று மட்டும் ஒரே நாளில் 3 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுதினம் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது