பிக் போஸ் நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி அவர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பிக் போஸ் வீட்டிற்கு அனுப்பப் படுவார்கள்.
இந்நிலையில், தற்போது அதில் கலந்து கொள்ளும் இரு போட்டியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
இதன் காரணமாக பிக் போஸ் நிகழ்ச்சி திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நான்காவது சீசன் பிக் பிரதர் என்ற பெயரில் வெளிநாடுகளில் வைரலான இந்த நிகழ்ச்சி இந்தியில் 14 வது வருடத்தை தொட்டு இருக்கிறது.
தமிழ் நாட்டில் கடந்த 2017ல் ஆரம்பமான பிக் பாஸ் நிகழ்ச்சியை 4வது சீசனாக நடிகர் கமல் தொகுத்து வழங்க உள்ளார். கொரோனா பரவல் இருப்பதால், நிகழ்ச்சிக்கு வரும் அத்தனை போட்டியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த புரமோ சொன்னபடி கேளு என உலகநாயகன் கமல்ஹாசன் மீண்டும் செம ஸ்டைலாக நடனம் ஆடிக் கொண்டு வந்த பிக் போஸ் புரமோவை பார்த்த ரசிகர்கள், லேட்டானாலும் இந்த ஆண்டு செம ட்ரீட் இருக்குடா என பிக் பாஸ் நிகழ்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
கமல்ஹாசனின் புது அவதாரமும் ரசிகர்களை வெகுவாக கவரந்துள்ளது. போட்டியாளர்கள் பற்றி வழக்கமாக இருக்கும் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு இந்த ஆண்டு இன்னமும் கொஞ்சம் அதிகமாகவே ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
சினிமா, சீரியல் என ஏகப்பட்ட பிரபலங்களின் பெயர்கள் அடிபடுவதும், பின்னர் அவர்கள் நாங்கள் இல்லை, எங்களை கூப்டவே இல்லை, கூப்டா உடனே ஓடி வந்திருப்போம் என ஏகத்துக்கும் ஜகா வாங்கி வருகின்றனர். பெரிய லிஸ்ட் நடிகை லக்ஷ்மி மேனன், ரியோ ராஜ், ஷிவானி, கிரண், அனு மோகன், அமுத வாணன், ஆதித்யா பாஸ்கர், அபி ஹாசன் என ஏகப்பட்ட பெயர்கள் போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பிக் போஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரே வாரத்தில் ஓடிப்போன நடிகர் ஸ்ரீ கூட மறுபடியும் வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. கொரோனா பாதிப்பு இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்பந்தமான இரு போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று கசிந்துள்ளது. இதனால், நிகழ்ச்சியை திட்டமிட்டபடி நடத்த முடியுமா? காலதாமதம் ஆகுமா? அல்லது வேறு போட்டியாளர்கள் கிடைப்பார்களா? என்ற கடும் அப்செட்டில் சில மாற்றங்களை செய்யவும் பிக் பாஸ் குழு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
டபுள் பெட் கிடையாது மேலும், இந்த முறை பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட புது விதிகளும் போடப்பட்டு இருக்கிறது. அதன் படி எந்தவொரு போட்டியாளரும் டபுள் பெட் பயன்படுத்தவும் தடை விதிக்கபட்டிருப்பதாக அண்மையில் தகவல் ஒன்று வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும், சமூக விலகல் உள்ளிட்ட ஏகப்பட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் இருக்கும் என தெரிகிறது