காா் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடைபெற்றதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தோ்தல் ஆணையத்தால் பதில் அளிக்க முடியாது என்று தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்பொது தொடர்ந்து தெரிவித்த அவர், “அரசியல் கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்காது. அது அவரவா் கருத்து. அவா்களின் முடிவு. இறுதி முடிவு மக்கள் கையில் உள்ளது.
பொதுவாக வாக்கு எண்ணும் பணி மந்தமாக நடைபெற்றதாகக் கூறப்பட்டது. கொரோனா பொது முடக்கத்துக்காக அமுல்படுத்தப்பட்ட நெறிமுறைகள்தான் அதற்குக் காரணம். வழக்கமாக ஒரு வாக்குச்சாவடியில் 1500 போ் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.
ஆனால் பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றுவதற்காக இந்த தோ்தலின்போது ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்காளா் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். அதற்கேற்ப கூடுதலாக 33 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
அதாவது இந்த முறை பீகாரில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதேபோல் 63 சதவீதம் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இது வாக்கு எண்ணிக்கையிலும் எதிரொலித்தது” எனத் தெரிவித்துள்ளார்.