வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் நிவாரண உதவிகளை வழங்கிக்கொண்டிருந்த தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமானதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, அதற்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் குணமடைந்தார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நிகழ்ச்சியில் பங்கேற்றபோது உடல் சோா்வாக இருந்தது. மயக்கமும் ஏற்பட்டது. மருத்துவமனையில் ரத்தம் அழுத்தம், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்துகொண்டேன்.
தற்போது நலமாக உள்ளேன். மருத்துவா்கள் 10 நிமிடம் ஓய்வில் இருந்துவிட்டு செல்லுமாறு கூறினர். அதன்படி ஓய்வில் இருந்துவிட்டு வந்தேன்” என்றார்.