மும்பை , புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உணவகங்கள், மதுக்கடைகள் போன்றவை இரவு 11 மணிவரை செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் காரணமாக பண்டிகை காலங்களை கொண்டாடுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.
வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் பரிசோதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், இங்கிலாந்தில் இருந்து வரும் 5 விமானங்களில் வரும் பயணிகள் நிறுவன ரீதியாக தனிமைப்படுத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.