பிரித்தானியாவில் இருந்து இந்தியா திரும்பிய 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியாவிற்கு வருகை தந்துள்ள 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 14 பேருக்கும், அமிர்தசரசில் 9 பேருக்கும், கொல்கத்தாவில் 2 பேருக்கும், சென்னையில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
புதியவகை உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வருகிறமை குறிப்பிடத்தக்கது.