உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டம் கையெழுத்தாகியுள்ளது.
105 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தில் மத்திய அரசும், மேற்கு வங்க அரசும், உலக வங்கியும் இணைந்து மேற்படி திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மேற்கு வங்க உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் இட மேம்பாட்டு திட்டம் ஆகியவை ஹூக்ளி ஆற்றில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தவும், கொல்கத்தா செல்வதற்கான வசதியை மேம்படுத்த இடவசதியைத் திட்டமிடவும், கொல்கத்தா மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், மாநில தளவாட துறை வளர்ச்சிக்கு பங்களிக்கவும் உதவும்.
இத்திட்டம், மேற்கு வங்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் அல்லது 30 மில்லியன் பேர் வசிக்கும் கொல்கத்தா மெட்ரோ பகுதி உட்பட மக்கள் தொகை அதிகம் உள்ள மேற்கு வங்கத்தின் 5 தென் மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டது.