நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டில் சுமார் 63 சதவீதம் குறைந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”2020ம் ஆண்டு நவம்பர் 15ம் திகதி வரையிலான காலகட்டத்தில் பயங்கரவாத சம்பவங்கள் 63.93 சதவீதம் குறைந்திருப்பதாகவும், பயங்கரவாத சம்பவங்களில் பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்பும் 29.11 சதவீதம் குறைந்துள்ளது.
இதேபோல் பயங்கரவாத சம்பவங்களில் அப்பாவி பொது மக்கள் உயிரிழப்பதும் 14.28 சதவீதம் குறைநதுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.