காஷ்மீரில் எச்சரிக்கை பதாதைகள் ஒட்டிய பயங்கரவாதிகள் 5 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீரில் நாசவேலைகளை அரங்கேற்றி வந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கட்டுப்படுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் காஷ்மீரின் புல்வா மாவட்டம் சீர் மற்றும் படா கண்ட் கிராமங்களில் சிலர் பாதுகாப்பு படையினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பதாதைகள் ஒட்டியிருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார், கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 5 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து மடிக்கணினியும் பிரிண்டர் ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.