மூன்றாம் கட்ட தடுப்பூசி சோதனையின் முதற்கட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடேக் நிறுவனம் மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது.
அதில் கோவாக்சின் தடுப்பூசி, கொரோனா வைரசுக்கு எதிராக 81 சதவிகித திறனுடன் செயல்படவல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாக்சினின் மூன்றாம் கட்ட சோதனை அறிக்கை கிடைத்துள்ளதாகவும், இனி அதைப் பற்றி நிபுணர் குழு ஆராய்ந்து முடிவெடுக்கும் எனவும் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்றாம் கட்ட சோதனை நிலுவையில் இருக்கும் போதே, கடந்த ஜனவரி மாதம் 3ஆம் திகதி கோவாக்சினுக்கு கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால அனுமதிக்கான ஒப்புதல் வழங்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.