கூட்டு நதிகள் ஆணையகத்தின் கட்டமைப்பின் கீழ் இந்தியா மற்றும் பங்களாதேஷ் நீர்வள செயலாளர் மட்டக் கூட்டம், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன்போது நீர்வளங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டதுடன், முன்மொழியப்பட்ட டீஸ்டா நீர் பகிர்வு ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில், இந்திய தரப்பு பொதுவான நதிகளின் நீர்வளத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக அதன் நேர்மையான அர்ப்பணிப்பு மற்றும் புதுடில்லியின் தொடர்ச்சியான முயற்சிகளை மீண்டும் வலியுறுத்தியது.
குறித்த சந்திப்பு, பிரதமரின் (மார்ச் 26- 27) டாக்கா விஜயத்திற்கு முன்னதாக நடைபெற்றுள்ளது.
இந்திய தூதுக்குழுவிற்கு தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் குமார், செயலாளர் (நீர்வள ஆதார ஆர்.டி மற்றும் ஜி.ஆர்), பங்களாதேஷ் தூதுக்குழு நீர்வள அமைச்சகத்தின் செயலாளர் கபீர் பின் அன்வர் தலைமை தாங்கினார்.
இரு நாடுகளிலும் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் 54 பொதுவான நதிகளை இந்தியாவும் பங்களாதேஷும் இதுவரை காலமும் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த விடயத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை இரு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.
மேலும், நதிகளின் நீரைப் பகிர்வதற்கான கட்டமைப்பு, மாசுபாட்டைக் குறைத்தல், நதிக் கரையோரப் பாதுகாப்பு, வெள்ள மேலாண்மை, பேசின் மேலாண்மை உள்ளிட்ட நீர்வளப் பிரச்சினைகள் முழுவதிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.