குறித்த பேச்சுவார்த்தை இந்திய எல்லைக்கு உட்பட்ட சுல்சுல் என்ற பகுதியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே இடம்பெற்ற பத்தாவது சுற்று பேச்சுவார்த்தையின் படி சீனா பாங்-காங் ஏரி பகுதியில் நிலைநிறுத்தியிருந்த தன் நாட்டு படையினரை திரும்பப் பெற்றுக்கொண்டது.
இதனால் கிழக்கு எல்லைப்பகுதியில் பலமாதகாலமாக நீடித்து வந்த பதற்றநிலை தணிந்துள்ளது.
இந்நிலையிலேயே இன்று மீண்டும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.