உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் உள்ள மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுடன் காணொலியூடாக கலந்துரையாடிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொரோனா தடுப்பூசி, மக்களுக்கு சேவை செய்யும் நமது முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளது. வரும் நாட்களில் அனைவருக்கும் தடுப்பூசி பாதுகாப்பை விரிவுப்படுத்துவோம்.
கொரோனாவுக்கு எதிரான நமது தற்போதைய போராட்டத்தில் கரும்பூஞ்சை நோய் புதிய சவாலாக மாறியுள்ளது. இதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.