செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

1 minutes read

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த ஏழு பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டி.ஆர். பாலு குறித்த கடிதத்தை குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அளித்ததாக தி.மு.க. தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டில் அமைச்சரவையின் தீர்மானத்தின்படி இந்த ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தண்டனைபெறும் ஏழு பேரும் 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடுகின்றனர் எனவும் உச்ச நீதிமன்றம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியுள்ளதையும் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More