0
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடத்தப்பட்ட சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி தமிழகத்தை சேரந்த இரண்டு உலோக சிலைகள், உட்பட ஆறு உலோக சிலைகள், ஆறு பழமையான ஓவியங்கள், இரண்டு கற்சிலைகளை திருப்பி இந்தியாவிடம் ஒப்படைக்க அந்நாட்டு தேசிய அருங்காட்சியகம் தீர்மானித்துள்ளது.
12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த குறித்த சிலைகள் கடத்தப்பட்ட நிலையில், அவுஸ்ரேலியாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.