புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் விரைவில் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன, தற்போதைய சூழல், தலிபான்கள் மூலம் மீண்டும் காஷ்மீரில் அத்துமீறல் நடைபெறுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.