வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது தென் ஒடிசாவுக்கு அண்மையாக வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவிழந்துள்ளது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் வட அகலாங்குகள் 15.0N – 20.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 80.0E – 90.0E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசாவை தாக்கிய சூறாவளி புயல், இன்று அதிகாலை 2:30 மணியளவில் வடக்கு ஆந்திராவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து.
இது அடுத்தடுத்த மணிநேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.