0
சென்னை: ரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பேரியம் கலந்த பட்டாசுகளை ஓரிடத்தில் சேமிக்கவோ வேறு இடத்துக்கு கொண்டு செல்லவோ கூடாது. உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.