ஜனவரி 26-ம் தேதி இந்தியாவின் 73-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அதன் நிறைவு பகுதியாக முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்க இந்திய கொடி ஏற்றப்பட்டது. பின்னர், கமாண்டர் விஜய் சார்லஸ் தலைமையில் வெவ்வேறு இசைக்குழுக்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
இதில், பல வகையான வாத்தியங்களுடன் இசை முழங்கப்பட்டது. இந்தாண்டு வெளிநாட்டு இசை நிகழ்ச்சி இடம்பெறவில்லை.
இதை தொடர்ந்து ஆயிரம் டுரோன்கள் மூலம் வர்ணஜாலம் செய்யும் பிரமாண்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முப்படை வீரர்களின் மரியாதையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.