ரஷ்ய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘எனது கட்சி 2018 இல் ஆட்சிக்கு வந்தவுடன், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுக் காண பேச்சு நடத்துவோம் என இந்திய தலைவர்களைக் கேட்டுக்கொண்டேன். ஆனால் அதற்கு சாதகமான பதிலை இந்தியா தராதமையால் நான் வருத்தமடைந்தேன்.
இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக பிரதமர் மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதிக்க விரும்புகிறேன்.
ஒரு விவாதம் மூலம் பாகிஸ்தான்-இந்தியா இடையிலான வேறுபாடுகள் தீர்க்கப்பட்டால் துணைக் கண்டத்தின் நூறு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு அது நன்றாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.