0
ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து 249 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) டெல்லியை வந்தடைந்துள்ளது.
இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் விதமாக ருமேனியா மற்றும் ஹங்கேரிக்கு 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.