இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில முன்னாள் தலைவருமான Navjot Singh Sidhu-விற்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
34 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சண்டை ஒன்றின் தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.
1988 ஆம் ஆண்டு சித்துவும் அவரது ஆதரவாளர் ஒருவரும் 65 வயதான Gurnam Singh என்பவருடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் குறித்த நபரை காரிலிருந்து வௌியே இழுத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து, குறித்த நபர் உயிரிழந்திருந்தார்.
அவரது குடும்பத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்ததுடன், இன்று தீர்ப்பை அறிவித்துள்ளது.