வட கொரியா பலிஸ்டிக் ஏவுகணையை ஜப்பானுக்கு மேலால் வீசியதற்கு இந்தியா கண்டனம் வெளியிட்டிருப்பதோடு இது பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஐ.நா பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ், வட கொரியாவுக்குத் தொடர்புடைய பாதுகாப்புச் சபை தீர்மானத்தை முழுமையாக செயற்படுத்துவதற்கு அழைப்பு விடுத்தார்.
வட கொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனையை அடுத்து ஜப்பான் தனது நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும்படி எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.