காம்பியாவில் ஏற்பட்டுள்ள குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இருமல் மருந்தின் உற்பத்தியை இந்தியா நிறுத்தியுள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியாவில் 69 பிள்ளைகள் உயிரிழந்ததற்கும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துக்கும் தொடர்பிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது.
மெய்டன் மருந்து உற்பத்தி நிறுவனம் தயாரித்த மருந்தை உட்கொண்ட பிள்ளைகள் பலர் சிறுநீரகப் பிரச்சினையால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகிய இரசாயனங்கள் மருந்தில் அதிக அளவில் இருந்ததாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.