தமிழ் நாட்டிலே கோயில் என்று எண்ணும் போது நம் மனக்கண் முன் நிற்பது தஞ்சையில் இருக்கும் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோவிலாகும்.
அத்தகைய கோவிலை கட்டிய மன்னன் முதலாம் ராஜ ராஜ சோழரின் பிறந்தநாள் இந்தியாவின் தமிழ் நாட்டில் மிகவும் சிறப்பாக சதய விழா என கொண்டாடப்படுவது வழக்காக இருந்து வருகிறது.
இந்த வருடம் முதலாம் ராஜ ராஜா சோழரின் 1037வது பிறந்தநாள் இப்போது அந்த விழாவை மு.க.ஸ்டாலின் அவர்கள் அரச விழாவாக அறிவித்துள்ளார். ஆனால் இதற்கான அடித்தளத்தை பல ஆண்டு காலங்களுக்கு முன்னே பல தரப்புகள் முன்வைத்த போதிலும் இது வெற்றி காணாத நிலையில் இன்று அதற்கான உரிமம் கிடைத்திட்டுள்ளது.
பல ஆண்டு காலங்களுக்கு முதலே இவ்வாறானதொரு ஆண்டு விழாவுக்கு சோழர் அவர் மனைவியின் சிலை குஜராத்தில் இருந்த ஒரு அறக்கட்டளையில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும் என்றொரு கடிதம் அன்று முதலமைச்சராக இருந்த நரேந்திரநாத் மோடி அவர்களிடம் கருணாநிதி முன்வைத்தது இன்று குறிப்பிட்ட வேண்டிய ஒன்றாக உள்ளது.