தமிழகம் வடக்கீழ் பருவ காற்று மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பரந்தளவில் மழை பெய்து வருகின்றது.
தென் தமிழகத்திதில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தேனிமாவட்டம் உட்பட பல பகுதிகளில் மழை பெய்ய இருக்கிறதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பை விடுத்துள்ளதுடன் அதற்காக இன்று தேனி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
இந்த மழை காலநிலை தமிழகத்தில் 9ம் திகதி வரை தொடர உள்ளதாகவு 6ம் திகதிவரை அடை மழை பெய்ய உள்ளதாகவும் 9ம் திகதிக்கு காற்றழுத்த தாழமுக்கம் உருவெடுக்க உள்ளதாகவும் அறிவுப்பு விடப்பட்டுள்ளது
சென்னையில் மாத்திரம் கடந்த 4 நாட்களால் மாத்திரம் சராசரியாக 27 c.m மழை பெய்துள்ளதுடன் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நோய்கள் ஏற்பட்ட வாய்ப்புள்ளதால் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாநகராட்சியும் இணைந்து நல்வாழ்வு துறை அமைச்சர் பா.சுப்பிரமணியம் தலைமையில் மருத்துவ முகாம் நடத்தப்படவும் உள்ளதாக தெரிய வருகின்றது