இந்தியாவின் திருநின்றவூரில் மெட்க்குலேஷன் மேல்நிலை பள்ளி தாளாளர் ஒருவர் சிறப்பு வகுப்பு எடுக்கிறேன் கவுன்சிலின் கொடுக்கிறேன் என்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை மாணவிகள் பெற்றோரிடம் அறிவிக்க பட்ட நிலையில் அவருக்கெதிராக பெற்றோர் மாணவர்கள் இணைந்து போராட்டங்களை மேற் கொண்டுவந்தனர் பின் பொலிஸ் புகாரும் கொடுத்து போராட்டம் நிறைவுக்கு வந்தது.
இந்த நிலையில் குற்றத்துக்குரிய தாளாளர் வினோத் 34 வயது தற்கொலை செய்வதாக ஒரு வீடியோ பதிவை சமூக வலை தளங்களில் பதிவிட்டு தலை மறைவாக இருந்த நிலையில் மாணவிகள் விசாரணை செய்யப்பட்டு பின்னர் அவர் கோவாவில் இருப்பது தெரிய வந்து இன்றைய தினம் நீதி மன்றத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு 15 நாட்கள் விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.