89 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கி 5 மணி வரைக்கும் மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர்.
14382 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பெற்றுள்ளதுடன் 788 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இதில் 399 சுயட்சை வேட்பாளர்கள், 70 பெண் வேட்பாளர்களும் போட்டியிட உள்ளனர்.
19 மாவட்டம் 89 தொகுதிகளை கொண்டுள்ள குஜராத்தில் 2 கட்டமாக தேர்தல் நடக்கின்றது இன்றைய தினம் (டிசம்பர் 1) முதல் கட்டமும் 2ஆம் கட்டத்தேர்தல் டிசம்பர் 5 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
இந்த பகுதியில் காரசாரமான பிரச்சரங்களும் கவர்ச்சசியான வாக்குறுதிகளும் வேட்பாளர்களால் வழங்கப்பட்டுள்ள நிலையில் யார் இந்த ஆட்சி பீடத்தை பிடிக்க உள்ளார் என்பது தான் கேள்வி
மோடி அவர்களின் சொந்த இடமாக உள்ள குஜராத்தில் 25 ஆண்டு காலமாக பாஜக அரசியலில் நிலைத்து உள்ளது எனவே மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்குமா அல்லது எப்போதும் பாஜகக்கு போட்டியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா அல்லது டெல்லி , பஞ்சாப்பை தன வசம் கொண்டுள்ள ஆம் ஆத்மீ கட்சி அதிகாரத்தை பிடிக்குமா என்பது டிசம்பர் 8 க்கு பின்னரே தெரியும் .