பண்டிகை காலங்களில் மது விற்பனை என்பது எங்கும் அதிகரித்துள்ள நிலையில் புத்தாண்டு முன்னிட்டான விற்பனையில் சாதனை படைத்துள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது.
புத்தாண்டு தினத்திலே வழமைக்கு அதிகமாக மது வகைகள் விற்பனையாகி உள்ளது. அரசு சார்பாக உள்ள 266 கடைகளில் 107 கோடிக்கும் மேல் மது விற்பனையாகியுள்ளது .
மாநிலம் முழுவதிலும் உள்ள ஒவ்வரு கடையிலும் 10 லட்சத்துக்கு மேலும் குறிப்பிட்ட ஒரு கடையில் 1.12 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது
கள்ளச்சந்தையின் கண்காணிப்பு அதிகரித்ததன் காரணமாகவே இம்முறை இவ்வாறு சாதனை விற்பனை நடைபெற்றுள்ளதாகவும் இதனால் மாத்திரம் அரசுக்கு 600 கோடிக்கு வரி வருவாய் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.