அதிமுகவின் தலைவர்கள் இன்று ஆளுநர் மீதான விவாதத்துக்கு விரிவான விளக்கத்தை மு.க .ஸ்டலின் கொடுக்க இருந்த நிலையில் சட்டசபைக்கு சமூகமளிக்கவில்லை .
சட்டசபை கடந்த 9 ஆம் திகதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்தில் அதிமுக உறுப்பினர்கள் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஆனால் இன்றைய தினம் ஆளுநர் மீதான விரிவான விளக்கத்துக்கு சமூகம் அளிக்கவில்லை என்பது அனைவருக்கும் கேள்வியாக உள்ளது.
இன்றைய தினம் பழனிச்சாமி சேலத்துக்கும் பன்னீர் செல்வம் தேனிக்கும் சென்றதாக கூறப்படுகின்றது. ஆனால் அனைத்து அதிமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.