நித்தியானந்தாவின் ‘கைலாசா’ என்ற கற்பனை தேசத்தின் பிரதிநிதிகள், ஐ.நா ஏற்பாடு செய்திருந்த ஜெனீவா கூட்டங்களில் பேசிய கருத்துகளை நிராகரிப்போம் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
கைலாசா பிரதிநிதிகளின் இந்தக் கருத்துகளுக்கும் ஐ.நா கூட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த நித்தியானந்தா உருவாக்கியதாகக் கூறப்படும் கைலாசா என்ற சர்ச்சை தேசத்தின் பிரதிநிதிகள் சிலர், ஐக்கிய நாடுகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது.
இது தொடர்பிலேயே ஐ.நா மேற்படி தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜெனீவாவில் நடந்த நிகழ்வுகளில் கற்பனையான ஒரு நாட்டின் பிரதிநிதி பதிவு செய்த வார்த்தைகளை நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
நித்தியானந்தா மீது பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பிறகு 2019ஆம் ஆண்டு அவர் இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவானார்.
மூலம் – பிபிசி