இந்தியாவின் பெங்களூருவில் ‘எச்3.என்.2’ என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘எச்3.என்2.’ வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடகத்தில் இந்த வைரசின் பரவல் அதிகரித்து உள்ளது.
இந்த வைரஸ் தாக்குதல் குறித்து உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசின் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
‘எச்3.என்2.’ வைரசின் முக்கிய அறிகுறிகள் ஒன்று, நீண்ட நாட்களுக்கு இருமல் இருக்கும். அத்துடன் காய்ச்சலும் இருக்கும்.
பெங்களூருவில் இந்த புதிய வகை வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இதேவேளை, கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் 95 பேருக்கும், அதில் பெங்களூரு நகரில் மட்டும் 79 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது 291 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில், இது குறித்து கர்நாடக அரசு சுகாதரத்துறை சார்பாக இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.