இந்தியாவின் தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளயங்கிரி ஆண்டவர் கோவில் வழிபாட்டு மாதம் ஆரம்பமானது.
வெள்ளியங்கிரி மலையில் 7 வது மலைப்பகுதியில் சுயம்பு லிங்க ஆண்டவர் கோவில் அமையபெற்றுள்ளது.
இவ்வாலயத்துக்கு அதிகமாக செல்வது வழக்கம் இப்படியிருக்க அந்த ஆலயம் அமையப்பெற்ற இடம் மிகவும் வனாந்தரப்பகுதி என்பதால் இங்கே பக்தர்கள் செல்வதற்கு மார்ச் ,ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.
மேலும் குறித்த காலத்துக்குள் அந்த பகுதியில் ஏற்பட்ட வறட்சி தீ காரணமாக அங்கே சில பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக தீப்பெட்டி , பீடி , சிகரெட் ,கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வனத்துறை அங்கு செல்லும் பக்தர்களை தமக்கு சிறந்த ஒத்துழைப்பை தருமாறு கேட்டுள்ளது.