தென் மேற்கு மழையால் மகாராஷ்டிராவின் ரெய்காட் மாவட்டத்தில் உள்ள இர்ஷல்வாடி கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 12 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் மண்சரிவில் சுமார் 100 பேர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தகவல் கிடைத்ததும் காவல் துறை, தீ அணைப்புத் துணை, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
இதுவரை 70 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலத்த காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து ன் நடைபெற்று வருகிறது.