பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நடைப்பயணத்தை தமிழகத்தில் ஏற்பாடு செய்து தொடர்ந்து வரும் நிலையில் பல அரசியல் கட்சிகளையும் அவர் விமர்சித்து வரும் நிலையில் அதிமுகவும் அதில் அடங்கும். அதிமுகவுக்கு ஆதரவாக கிஷோர் கே சாமி பதிவிட்டுள்ள டிவிட்டுக்கு பதில் தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.
அதில் அதிமுக தலைவர்களை இழிவு படுத்தினால் மட்டுமே, தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தூக்கி எறியப்பட்டு, ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்றும் அந்த உத்தி உங்களுக்கு தெரியாதா? என்றும் கேட்டுள்ளார்.
இங்கு பாஜக தலைவராகத் தொடர முடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் வெறும் டம்மிபீஸ் என்றும் கடுமையாக சாடியிருக்கிறார்.அதிமுகவுடன் கூட்டணி பேச முடியாது என்றும் அண்ணாமலையை நெருங்க விடமாட்டார்கள் என்றும் அவருக்கு தெரியும் என்றும் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டில் பதிவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ரமா என்ற பெண் அண்ணாமலையிடம் அளித்த புகார் மனு சாலையில் வீசப்பட்டதாக வெளியான செய்தியை குறிப்பிட்டுள்ள காயத்ரி ரகுராம், இது ஒரு “என் மக்கள், என் மண்” யாத்திரை அல்ல. அது “என் நண்பர்கள் பணம், என் விளம்பரம்” பாவ யாத்ரா என குறிப்பிட்டுள்ளார்.