மாணவரை கண்டித்த ஆசிரியருக்கு செருப்பால் அடித்த சோகம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் பொலிஸாரினால் மிக சிக்கலான சூழலில் இருந்தது மீற்கப்பட்டார்.
தமிழகம் முழுவதுமே பள்ளி மாணவர்கள் செய்யும் அடாவடி செயல்கள் அதிகரித்து வருகின்றன. ஆசிரியரை மரியாதை இல்லாமல் பேசுவது; படிக்க சொல்லும் ஆசிரியரை அடிக்க போவது; ஆசிரியை பாடம் நடத்தும் போது பின்னால் இருந்து நடனமாடுவது என மாணவர்களின் ஒழுங்கீனங்கள் தினசரி சமூக வலைதளங்களில் வருகின்றன.
வீட்டிலும் கண்டிப்பு இல்லாமல், பள்ளியிலும் கண்டிப்பு இல்லாமல் போனதே இதற்கு மாணவர்களின் இந்த கோமாளித்தனங்களுக்கு முக்கிய காரணம் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறையில் படிக்காமல் சக மாணவர்களுடன் விளையாடி கொண்டிருந்த மாணவனை கண்டித்து மேலும்,பிரம்பால் அடித்த ஆசிரியருக்கு மாணவனின் பெற்றோர்கள், உறவினர் என சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அவரை சூழ்ந்து செருப்பாலும், கட்டை, கல்லாலும் அடித்தனர். இதனால் ஆசிரியரின் முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இருந்தாலும், விடாமல் ஆசிரியரை மாணவனின் உறவினர்கள் தாக்கி . அவரை பொலிஸ் மீட்டதால் ஆத்திரமடைந்து போராட்டம் செய்த சம்பவம் வைரலாக பேசப்படுகிறது.