கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க.தான். பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரையை ராமேசுவரத்தில் கடந்த 28-ந்தேதி தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்ற அண்ணாமலை நேற்று நெல்லை மாவட்டத்தில் பாதயாத்திரையை தொடங்கினார்.
நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஸ்வரி தி.மு.க.வில் இருந்து விலகி நேற்று அண்ணாமலை முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார் அந்நிகழ்ச்சியின் போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க.தான் இதை ஆதாரத்துடன் கூறுகிறேன். விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந்தேதி முதல் இந்த திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரையிலும் வட்டி இல்லாமல் கடன் வாங்கிக் கொள்ளலாம். பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும். இதற்கு நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.