ஜெய்சங்கர் மந்திரி சபையில் வெளியுறவுத்துறை மந்திரியாக இருப்பவர் . இவர் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் 2-வது முறையாக ஜெய்சங்கர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
ஐக்கிய அமெரிக்காவிலும் (2014–15) இந்தியத் தூதராகவும் சிங்கப்பூரில் (2007–09) இந்திய உயர் ஆணையராகவும் பணியாற்றி உள்ளார். இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாட்டை பேரம் பேசுவதில் முக்கியப் பங்காற்றி உள்ளார்.