மது வெறியால் ஏற்பட்ட விபரீதம் இந்தியாவின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இவை அனைத்தும் சிறிது நேரத்தில் நடந்து விட்டது.ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
ஏராளமான பொலீசார் குவிக்கப்பட்டனர். கொலைக்கான காரணம் குறித்து பொலிலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது செந்தில்குமார் பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்ததால் சரக்கு வேன் ஒன்றை வைத்திருந்தார். அந்த வேனுக்கு டிரைவராக ஒருவர் வேலை செய்துள்ளார்.
அந்த டிரைவரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரை வேலையை விட்டு செந்தில்குமார் நிறுத்தினார். ஆனால் அந்த டிரைவர் வேலையை விட்டு நின்ற பிறகும் செந்தில்குமார் வீட்டிற்கு வரும் பாதையில் அமர்ந்து மதுகுடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அப்போது செந்தில்குமார் அவரை எச்சரித்து வேறு பகுதிக்கு சென்று மது அருந்துமாறு பலமுறை கூறியுள்ளார். இந்த நிலையில் அந்த டிரைவரும், அவருடைய நண்பர்கள் 2 பேரும் நேற்று இரவு செந்தில்குமாரின் வீட்டிற்கு செல்லும் பாதையில் அமர்ந்து மதுகுடித்து உள்ளனர். இதை பார்த்த செந்தில்குமார் அவர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து போகுமாறு கூறினார். ஆனால் அவர்கள் அங்கிருந்து போகாமல் செந்தில்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரை வெட்டியுள்ளனர். இவருடைய அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த மோகன்ராஜ், அவரது தாயார் புஷ்பவதி மற்றும் ரத்தினாம்மாள் ஆகியோரையும் கொலை செய்து விட்டு அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக பொலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த தனிப்படை போலீசார் கொலையாளிகள் தப்பி செல்லாதவாறு பல்லடத்தில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். எனவே கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே கொலையான 4 பேரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.