மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த கடுமையான மனித உரிமை மீறல்களைக் கையாள்வதில் தாங்கள் மிகவும் மெத்தனமாகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா சாடியுள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் வெடித்த கலவரங்களை உடனடியாகக் கையாள இந்தியா தவறியதாக ஐ.நா குற்றஞ்சாட்டியது.
குறித்த கலவரத்தில் குறைந்தது 160 பேர் உயிரிழந்ததாகவும் 300 பேர் காயமுற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இனங்களுக்கு இடையில் வெறுப்புணர்வைத் தூண்டக்கூடிய பேச்சுகளால் அம்மாநிலத்தில் கலவரம் வெடித்ததாக ஐ.நா மனித உரிமை மன்றம் தெரிவித்தது.
அதேவேளை, மணிப்பூரில் இனக்கலவரம் பற்றி தவறான தகவல்களை வெளியிட்டதாக ஊடகவியலாளர்கள் நால்வர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.