பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நவீன சிங்கப்பூரின் சிற்பி என்று பரவலாகப் போற்றப்படும் லீ குவான் யூவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி மேலும் குறிப்பிடுகையில் “லீ குவான் யூவின் 100வது பிறந்தநாளின் சிறப்பு சந்தர்ப்பத்தில் அவருக்கு எனது மரியாதைகள்” ,” சிங்கப்பூர் மாற்றத்தில் அவரது தொலைநோக்கு தலைமை முக்கியப் பங்காற்றியது.
அவரது தொலைநோக்கு பார்வையும், இடைவிடாத நாட்டமும் அவரது தனிப்பட்ட மகத்துவத்திற்குச் சான்றாகும். அவரது பணி உலகம் முழுவதும் உள்ள தலைவர்களை ஊக்குவிக்கிறது,” இவ்வாறாக எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.