இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் வைத்தியசாலை ஒன்றில் ஒரு நாளிலேயே 24 பேர் மரணித்துள்ளனர்.வைத்தியர் தட்டுப்பாடே இதற்கு காரணம்.
மகாராஷ்டிராவில் உள்ள அரச வைத்தியசாலையிலேயே இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த வைத்தியசாலையில் எப்போதும் வைத்தியர் தட்டுப்பாடு காணப்படுவதாக பலமுறை முறைப்பாடுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் தீர்வு எடுக்கப்படவில்லை
எனவே 24பேர் உயிரிழந்துள்ளனர் இவர்களில் 12 பிறந்த குழந்தைகளும் அடங்குகின்றனர். தற்போது இந்த மரணங்கள் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகின்றது.