செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மோடியின் பதவியேற்பு விழாவில் 7 அயல் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

மோடியின் பதவியேற்பு விழாவில் 7 அயல் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

1 minutes read

இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை ஞாயிற்று கிழமை (09) இரவு 7:15 மணிக்கு இந்திய ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் மோடி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க, பங்காதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்ஸு , சிசல்ஸ் துணை ஜனாதிபதி அகமது அபிப், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல், பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே உள்ளிட்ட 7 அயல் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அண்டை நாடுகளின் தலைவர்களை அழைத்து உள்ளோம். இது  “அயல் நாடுகளுக்கு முன்னுரிமை (Neighbourhood First)” கொள்கை மற்றும் ”சாகர் (SAGAR)” எனப்படும் பிராந்தியத்தில் அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பார்வைக்கு இந்தியா அளித்த மிக உயர்ந்த முன்னுரிமையாக இது ஏற்பாடு செய்து உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பதவியேற்பு விழாவில் பங்கேற்பதைத் தவிர, அயல் நாட்டு தலைவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அளிக்கும் விருந்திலும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More