லக்னோ: உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தின் மீது தலை வைத்து தூங்கிய நபரால் அவ்வழியாக வந்த ரயில் நிறுத்தப்பட்டதால் அவர் உயிர் தப்பினார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கர் கே லகேஷ் என்ற பிரபலமானஎக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டது. அதனுடன், “பயன்பாட்டில் உள்ள ரயில் தண்டவாளத்தின் மீது தலை வைத்து ஒருவர் படுத்திருக்கிறார். அவருக்கு பின்னால் ஒரு குடை நிழலுக்காக விரிக்கப்பட்டிருந்தது.
அந்த நேரத்தில் அவ்வழியாக ஒரு ரயில் வந்துள்ளது. நல்ல வேளையாக இதை கவனித்த ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டு அந்த நபரை நோக்கி செல்கிறார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவரை எழுப்பி அப்புறப்படுத்திவிட்டு ரயிலை ஓட்டிச் சென்றார்” என பதிவிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ரயில் ஓட்டுநர் கவனிக்காமல் சென்றிருந்தால் அந்த நபர் உயிரிழந்திருப்பார். அத்துடன் அந்த ரயில் விபத்தில்சிக்கியிருக்கவும் வாய்ப்பு உள்ளது.உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரிலிருந்து பிரதாப்கர் நகருக்கு செல்லும் பாதையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த காட்சியை ரயில் ஓட்டுநர் தனது செல்போனில் வீடியோ எடுத்து பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தவீடியோவைப் பார்த்த இணையவாசிகள், ரயில் ஓட்டுநரின் செயலைபாராட்டி தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
அதேநேரம், அந்த நபர் நிழலுக்காக குடையை விரித்து படுத்த அவருக்கு ரயில் வருமே என்று தோன்றாதது ஏன் என ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக ரயில் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. இதுரயில்வே துறையின் மெத்தனப் போக்கு என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், பொறுப்பற்ற இதுபோன்ற மனிதர்களின் செயலும் விபத்துக்கு காரணம் என்பது தெளிவாகிறது.