ஈழத்தமிழர்களின் அடுத்த தலைமுறையினரின் கலைப்பயணம் தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசத்திலும் வீரியம் கொள்வதை தற்போது அவதானிக்க முடிகின்றது. வாழ்வின் அழுத்தங்களை குறைத்து வாழ்வை வசந்தமாக்குகின்றது இந்த நிகழ்வுகள்.
கடந்த சனிக்கிழமை இலண்டனில் நடைபெற்ற ஐ டான்ஸ் ஸ்டூடியோ ஒழுங்கு செய்த ADHRIT நடன நிகழ்வு அரங்கம் நிறைந்த நிகழ்வாக நடைபெற்றது மட்டுமன்றி அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்டது. முற்றிலும் இளைஞர்களால் அழகியலோடும் நேர்த்தியான முறையிலும் அரங்கினை கையாண்டுள்ளமை ஐ டான்ஸ் ஸ்டூடியோவின் தரத்தினை காட்டுகின்றது.
அன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட டிலானி குறிப்பிடுகையில் “திட்டமிட்ட நேரத்தில் தொடங்கி மிகவும் கடினமான நடனஅமைப்பை மிகச் சிறப்பாக தனது மாணவர்களை கொண்டு ஆடவைத்து, பல மொழி கலைஞர்களை ஒரே மேடையில் இணைத்த பெருமையை எம் மண்ணின் மைந்தர்கள் நிகழ்த்தியிருந்தார்கள். ”கடினமானது” என்று ஏதுமில்லை என்பதனை எம் கண்முன்னே படம்போட்டு காட்டிய ஜாம்பவான்கள்.. ஊக்குவிக்க வேண்டியதும் உளம் போற்ற வேண்டியதும் ஈழத்தை நேசிக்கும் ஈழக்கலையை விரும்பும் அனைவரதும் கடமைப்பாடாகும்” எனக்குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
படங்கள் – ஜனனம்