பிரித்தானியாவில் தற்போது நடைமுறையில் உள்ள விசாக்கட்டனங்களில் உயர்வு ஏற்பட இருக்கின்றன. நேற்றைய தினம் பிரித்தானிய பாராளுமன்றம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. இந்த கட்டன உயர்வுகள் மூலம் பிரித்தானிய பொதுமக்களின் வரிப்பணம் மீதான சுமையை குறைக்கமுடியும் எனத்தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பிரகாரம் சாதாரண பயண, கல்வி, நிரந்தர வதிவிட, குடும்ப இணைவுக்கான மற்றும் வேலைசெய்வதற்கான விசாக்களுக்கு 4% கட்டன அதிகரிப்பும் பிற நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காண முன்னுரிமை விசாக்களுக்கான கட்டனங்கள் 15% இனாலும் அதிகரிக்கப்பட உள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ம் திகதி இப் புதிய கட்டனங்கள் நடைமுறைக்கு வருகின்றன.