வருடம்தோறும் இலண்டனில் நடைபெறும் தமிழர் வர்த்தகக் கண்காட்சியான “இலண்டன் தமிழர் சந்தை” நாளை மற்றும் நாளை மறுநாள் லைக்கா குழுமத்தின் ஆதரவில் நடைபெற உள்ளது. மேற்கு இலண்டன் நகரான ஹாரோ பகுதியில் நான்காவது வருடமாக நடைபெறும் இந்த நிகழ்வில் சுமார் நூற்றுக்கும்மேற்பட்ட தமிழர் வர்த்தக நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றன.
காலை நிகழ்வுகள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் காட்சிகள், விருந்தினர் வருகையென பல்வேறு அம்சங்களையும் கொண்டதாக சுமார் பத்தாயிரம் பார்வையாளர்களை வரவேற்க காத்திருப்பதாக இலண்டன் தமிழர் சந்தையினை ஒழுங்குசெய்யும் அமைப்பான பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.