விஸ்டன் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் இருந்து 20 வயதுடைய பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
சனிக்கிழமை காலை ஹாக்னியில் காருக்குள் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், கொலைச் சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காலை 6.42 மணிக்கு ஹாக்னியின் விஸ்டன் வீதிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பு பொலிஸார் முதலுதவி வழங்கினர்.
எனினும், அவர்கள் முயற்சி செய்த போதிலும், 20 வயதுடைய பெண், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 20 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையில், இறந்தவரும் கைது செய்யப்பட்டவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.