உலகத்தின் கவனத்தைத் திருப்பிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மிரட்டல் விவகாரம் தொடர்பாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கனதியான எதிப்பை தெரிவித்து வரும் நிலையில், இன்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் மாபெரும்எழுச்சி பேரணி நடைபெற உள்ளது.
தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் சொலிடாரிடி, தமிழர் ஒருங்கிணைப்பு குழு, நாடுகடந்த அரசாங்கம் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை இணைந்து இக் கண்டனப் பேரணியை ஒழுங்கு செய்துள்ளனர்.
இன்று மதியம் இரண்டு மணியளவில் இலங்கை தூதரகம் முன்பாக ( 13 Hyde Park Gardens, W2 2LU – Nearest Underground Station: Lancaster Gate, Central Line ) பேரணி தொடங்கி கொமன்வெல்த் அலுவலகம் முன்பா முடிவடைய உள்ளது.